வாழ்க வளமுடன் !!
இந்த இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்..
ஜோதிடம் என்பது ஒரு உயர்ந்த மதிப்பு மிக்க அறிவியலாகும். ஜோதிடத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். சூரியன் இல்லாத பகலும், நிலவு இல்லாத இரவும் பிரகாசம் அடையாது. அது போல் ஜோதிடர்களின் வழிகாட்டுதல் இல்லாத வாழ்க்கை முறையும் சிறப்பினை தராது.
நமது முன்னோர்கள் ஜோதிடர்கள் இல்லாத ஊர்களில் வசிக்க வேண்டாம் என கூறியுள்ளார்கள். வாழ்க்கை பயணம் என்பது ஒரு நதியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஜோதிடரை ஒரு அனுபவிக்க படகோட்டி என்று சொல்லலாம்.
ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களை பெற்று இருப்பதில்லை. மேலும் ஒரே மாதிரி படித்து மதிப்பெண் பெறுவதில்லை. இதே மாதிரி வாழ்க்கையில் நடக்கும் பலநூறு சம்பவங்களை ஆராய்ந்து பார்ப்போமானால் ஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நேர ஜாதகப்படி கொடுப்பினை தான் வாழ்க்கையில் கடைசி வரை நடத்தி செல்கிறது என்பது புரிய வரும்.
அவரவர் ஜாதக விதிப்படி வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் (உயர்கல்வி படிப்பு, வேலை/வியாபாரம், உள்ளூர்/வெளிநாடு, திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், வீடு வாகன யோகங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றி) ஜோதிடர் மூலம் ஆராய்ந்து அதன்படி செயல்பட்டால் கொடுப்பினையை நன்கு அனுபவித்து எதிர்பாராமல் வரும் தோல்விகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். இது முன்னோர்களின் வாக்காகும்.